News December 26, 2025
நெல்லை அருகே வீட்டில் ஒருவர் மர்ம மரணம்!

தாழையூத்து பகுதியில் வசித்து வந்தவர் குமாரசாமி (26). இவரது மனைவி அமுதா தனது தாய் வீட்டிற்கு கடந்த 22ம் தேதி சென்றுவிட்டு, இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டின் உள்புறம் பூட்டியிருந்த நிலையில், கணவர் நீண்ட நேரம் திறக்கவில்லை. இந்நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குமாரசாமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
நெல்லை: டூவீலர் விபத்தில் இளைஞர் பலி

மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 9 பேர் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு சுமார் 45 கிமீ தொலைவில் உள்ள காவல் கிணறு என்ற இடத்திற்கு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது வள்ளியூர் அருகே ஏற்பட்ட விபத்தில் முஜாஹித் (22) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டி வந்த ரிஸ்வான் படுகாயத்துடன் பாளை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
News December 28, 2025
நெல்லை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

நெல்லை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 28, 2025
நெல்லையில் பயங்கரம்., தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை!

விக்கிரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (47). இவர் மைக்செட் அமைத்துக்கொடுக்கும் தொழிலாளியாக இருந்தார். இவர் நேற்றிரவு அதே பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தவலறிந்து வந்த அம்பை போலீஸார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.


