News April 29, 2024
நெல்லை அருகே மூடப்படும் பள்ளி: மாணவிகள் தவிப்பு

திசையன்விளை அருகே உள்ள வெங்கட்ராயபுரம் கிராமத்தில் தனியார் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 80 மாணவிகள் மட்டுமே தற்போது படிப்பதால் இந்த பள்ளியை நடப்பு கல்வி ஆண்டுடன் மூடுவதாக நிர்வாகம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று (ஏப்ரல் 29) கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, பள்ளியை தொடர்ந்து அரசு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
Similar News
News February 15, 2026
திருநெல்வேலி போலீஸ் வீட்டில் திருட்டு

கல்லிடைகுறிச்சி பொன்மா நகரை சேர்ந்தவர் ஞானசுந்தர். இவர் விகேபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். கல்லிடைக்குறிச்சியில் உள்ள அவரது பூட்டி இருந்த வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டிலிருந்த விளக்கு, பித்தளை பொருட்கள், ரூ.4000 ரொக்க பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து மூன்று பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
News February 15, 2026
திருநெல்வேலி: பஸ் நேரங்களை தெரிஞ்சுக்க – CLICK

நெல்லை பேருந்து நிலையத்தில் 6 நடைமேடைகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாங்குநேரி, ஏர்வாடி, வள்ளியூர், திசையன்விளை,களக்குடி, ரெட்டியார்பட்டி, கீழப்பிள்ளையார்குளம் உட்பட நெல்லையில் உள்ள பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <
News February 15, 2026
திருநெல்வேலி: அரசுப் பள்ளிக்குள் துப்பாக்கி தோட்டா..!

திருநெல்வேலி திம்மராஜபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சட்டசபை தேர்தல் பணிக்காக தயார் செய்யும் போது, பழைய ரக துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதை தலைமையாசிரியர் போலீசில் ஒப்படைத்தார். மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் விசாரணை நடந்தது. தோட்டா காலாவதியானது; நவீன துப்பாக்கிக்கு பயன்படாதது என போலீசார் தெரிவித்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் விசாரணை நடக்கிறது.


