News September 22, 2024
நெல்லை அருகே சொத்து தகராறில் இளைஞர் கொலை

நெல்லை மாவட்டம் ராமயன்பட்டியில் சீனிவாசன் என்ற இளைஞர் இன்று(செப்.,22) இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்தத மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையானவரின் உடலை கைப்பற்றி பாளை., அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்க்காக அனுப்பி வைத்துள்ளனர். கொலையாளி போலீசில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News July 5, 2025
நெல்லையில் 20 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்

நெல்லை அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. இதற்காக விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் பணியிடமாறுதல் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 167 பேர் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த நிலையில் 20 பேருக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் கிடைத்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News July 4, 2025
காவல்துறைக்கு வருவதற்கு காரணம் என் மனைவி – துணை காவல் ஆணையர்

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு ஒரு வார புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது. இன்றைய நிகழ்ச்சியில் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் பிரசன்ன குமார் பேசினார். அவர் கூறியதாவது; தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் மாணவிகள் வெற்றி பெறலாம். மருத்துவத்துறையில் இருந்து காவல்துறைக்கு வந்ததற்கு என் மனைவியின் ஆதரவு முக்கிய காரணம் என்றார்.
News July 4, 2025
நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு எழுத உள்ள 36,000 தேர்வர்கள்

நெல்லை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வு 12ஆம் தேதி நடைபெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த தேர்வை மாவட்டத்தில் 108 இடங்களில் 132 மையங்கள் நடைபெற உள்ளது. இந்த தேர்வு 36 ஆயிரத்து 11 பேர் எழுத விண்ணப்பித்துள்ளனர். தேர்வு மையத்தின் நிகழ்வுகள் வீடியோவில் பதிவு செய்யப்படும் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்யப்படும்.