News October 26, 2025
நெல்லை: அரசு பேருந்துக்கு நீதிமன்றம் ரூ.20,000 அபராதம்

நாங்குநேரி பகுதியை சேர்ந்த தேவி, மகன்கள் இசக்கி அரவிந்த் மற்றும் நம்பிராஜன் ஆகியோர் நெல்லையில் இருந்து நாங்குநேரிக்கு அரசு பேருந்தில் பயணம் செய்தனர். ஆனால் நடத்துனர் வள்ளியூருக்கான பயணச்சீட்டு கொடுத்து கூடுதலாக 24 வசூலித்ததுடன் நாங்குநேரிக்குள் பேருந்து செல்லாமல் வெளியிலேயே இறக்கிவிட்டு சென்றனர். பாதிக்கப்பட்டோர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் 20 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு.
Similar News
News February 12, 2026
மாநகரில் இரவு ரோந்து காவலர்கள் உதவி எண்கள்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப். 12 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News February 12, 2026
நெல்லை மக்களே., இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.நெல்லை – 9445000380
2.பாளை – 9445000381
3.நாங்குநேரி- 9445000387
4.ராதாபுரம்- 9445000388
5.அம்பை- 9445000386
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News February 12, 2026
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் (பிப்.15) ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாளை (பிப் 13) நெல்லை, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். SHARE IT..


