News May 16, 2024
நெல்லை: அரசுப் பள்ளியில் சேர கடும் போட்டி

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பில் மாணவிகள் அதிக மதிப்பெண்களை எடுத்து அபார சாதனை படைத்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இங்கு மாணவிகள் சாதனை படைப்பதால் இங்கு சேர்வதற்கு மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக 11ஆம் வகுப்பு பாடப் பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. விஐபிகள் பரிந்துரைக்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.
Similar News
News December 16, 2025
நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு.. சிறுவர்கள் கைது

வி.கேபுரம் அருகே அம்பலவாணபுரம் நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்த மதன் (21) என்பவரின் விலை உயர்ந்த பைக்கை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 4 சிறுவர்கள் மற்றும் மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சிறுவன் பெட்ரோல் குண்டு வீசியதை ஒப்புக்கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
News December 16, 2025
நெல்லை: FREE கேஸ் சிலிண்டர் வேண்டுமா? APPLY NOW

நெல்லை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
News December 16, 2025
நெல்லை: பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஷேக் ரோகித் (26) நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உணவகத்தில் பணியாற்றி வந்தார். நேற்று பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கையில், வண்ணாரப்பேட்டை பகுதியில் சென்றபோது ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பைக்கில் வந்த மேலப்பாளையம் ஆதில் (20), கலீல் ரகுமான் (20) காயமடைந்தனர். இதுகுறித்து பாளை போலீசார் விசாரிக்கின்றனர்.


