News January 22, 2026

நெல்லை: அரசிற்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக நிர்வாகி

image

நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் ரூ.7 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு ஒரு ஆண்டுகள் பின்பு திறக்கப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்னும் செயல்படாமல் உள்ளது. எனவே உடனடியாக மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை என்றால் ஒரு மாதத்தில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News March 7, 2026

நாங்குநேரி சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

image

நாங்குநேரி அருகே பெரும்பத்து பஜாரில் கடந்த 2ம் தேதி இரவு 3 பைக்குகளில் வந்த கும்பல் ரோட்டின் அருகே டீக்கடையில் நின்ற மக்களை சரமாரியாக அறிவாளால் வெட்டியது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மஞ்சள் குளத்தை சேர்ந்த மகாராஜன் என்பவரை தற்போது போலீசார் கைது செய்தனர்.

News March 7, 2026

தபால் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

பாளையங்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் மார்ச்.10 அன்று காலை 11 மணிக்கு வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் பகுதி தபால் சேவை வாடிக்கையாளர்கள் பங்கேற்று குறைகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நெல்லை அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!