News September 19, 2025

நெல்லை: அதிகாலையில் மனைவி வெட்டிக் கொலை

image

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் கணவன் மனைவிக்கு இடையே நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பாட்டார். கொலை செய்யப்பட்ட கங்கைகொண்டான் ஆலடிப்பட்டியை சேர்ந்த பிரதிகா (20) உடலை கைப்பற்றி நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்த கணவன் அன்புராஜை (24) சந்திப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 19, 2025

நெல்லை: ராணுவ வீரர் பலி

image

திருவேங்கடம் அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மகேந்திரன் நேற்று (செப் 18) தனது மகனின் மருத்துவ பரிசோதனை சான்று வாங்குவதற்காக பைக்கில் அழகாபுரியிலிருந்து நெல்லைக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மானூர் அருகே அழகிய பாண்டியபுரம் சிற்றாற்று பாலம் அருகே பைக்கு சென்ற போது சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News September 19, 2025

நெல்லை: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நெல்லை மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

நெல்லை மாநகராட்சி பகுதிக்குள் செல்ல தடை!

image

திருநெல்வேலி பழைய பேட்டையில் உள்ள வாகன முனையம் மற்றும் விற்பனைச் சந்தை வரும் 22ம் தேதி முதல் இயங்கும் என மாநகராட்சி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. 22 ஆம் தேதி முதல் கனரக வாகனங்கள் மற்றும் அனைத்து வகையான லாரிகள் மாநகராட்சி பகுதிக்குள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.

error: Content is protected !!