News October 13, 2025

நெல்லை: அக்காள், தம்பியை கடத்திய 2 பேர் கைது

image

டவுன் பழனி தெருவை சேர்ந்த பார்வதி என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் வானுமாமலை என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாரம் ரூ.10,000 வட்டி செலுத்தி வந்துள்ளார். ஒரு மாதம் வட்டி செலுத்தவில்லை. நேற்று முன்தினம் பார்வதி தனது தம்பியுடன் சுத்தமல்லியில் நின்று கொண்டிருந்த போது வானுமாமலை 2 பேரையும் காரில் கடத்தி சென்று மிரட்டியுள்ளார். இதில் பேட்டை போலீசார் நேற்று வானுமாமலையை கைது செய்தனர்

Similar News

News October 13, 2025

நெல்லைக்கு கனமழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளியன்று கனமழை இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை மறுநாள்(அக்.15) நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 13, 2025

நெல்லை: B.E படித்தவர்களுக்கு ரூ.90,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பொறியியல் காலியிடங்களுக்கு 474 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. CIVIL, MECH., EEE, ECE உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த B.E/B.Tech படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் அக்.16க்குள்<> இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,600 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். B.E படித்த உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க

News October 13, 2025

நெல்லை: பெட்ரோல் குண்டு வீச்சு – சிக்கிய நபர்கள்

image

தச்சநல்லூர் காவல் நிலையம் அருகேயும், தாழையூத்து காவல் சோதனை சாவடி அருகேயும் 2 பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றுள்ளனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பைக்கில் வந்த மர்ம நபர்களை CCTV காட்சி மூலம் கண்டறிந்தனர். இதில் ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த அஜித் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் உட்பட 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

error: Content is protected !!