News June 4, 2024
நெல்லையில் 12வது சுற்றில் திமுக முன்னிலை

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: 12வது சுற்றில் காங். வேட்பாளர் ராபர்ட் புரூஸ் 81,330 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
காங். – 2,71,251
பாஜக – 1,89,921
நாதக – 52,205
அதிமுக – 49,109
12ம் சுற்று முடிவில் அதிமுக தொடர்ந்து 4ம் இடத்தில் உள்ளது. இதுவரை எண்ணிய மொத்த வாக்குகள்: 5,90,520
Similar News
News March 5, 2026
நெல்லை: வீட்டின் மாடியில் கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது

நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த மாரியப்பன்(19) என்பவர் புகழேந்தி தெருவில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எஸ்ஐ பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 220 கிராம் எடை உள்ள கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரியப்பன் என்பவரை கைது செய்தனர்.
News March 5, 2026
திருநெல்வேலி: இன்று புதிய அரசு மருத்துவமனை திறப்பு

திருநெல்வேலி வள்ளியூரில், அதிநவீன அறுவை சிகிச்சை கூடம், EGC, CT SCAN, X-RAY உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ரூ.30 கோடி மதிப்பில், அரசு தலைமை மருத்துவமனை, புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை, இன்று (மார்ச்.05) மாலை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறக்கவுள்ள நிலையில், நேற்று(மார்ச். 4) காலை, சபாநாயகர் அப்பாவு, மாவட்டஆட்சியர் சுகுமார் ஆகியோர் அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
News March 5, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (மார்ச்.4) இரவு ரோந்து பணிகளில் செந்தில்குமார் ஈடுபடுகின்றனர். துணை ஆணையர் வினோத் சாந்தாராம் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.


