News September 4, 2025
நெல்லையில் வீட்டிற்கு ரூ.1.61 கோடி மின்கட்டணம்

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி உபமின் நிலையத்திற்குட்பட்ட மருதகுளம் பகுதியில் கூலித்தொழிலாளி மாரியப்பன் என்பவர் வசித்து வருகின்றார்.இவரது வீட்டிற்கு இந்த மாதம் ரூ.1,61,31,281 மின் கட்டணம் வந்துள்ளது. இது குறித்து அவர் மின்வாரியத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு மின்வாரியம் தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு ஏற்பட்டுள்ளது. இது இன்று சரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 6, 2025
நெல்லை 46வது வார்டில் புதிய தார் சாலை

மேலப்பாளையம் மண்டலம் 46வது வார்டு பீடி தொழிலாளர் காலனியில் தார் சாலை அமைக்கும் பணியினை நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர், பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் துணை மேயர் ராஜூ நெல்லை கிழக்கு மாநகர திமுக பொறுப்பாளர் ALB. தினேஷ், மேலப்பாளையம் மேற்கு பகுதி திமுக பொறுப்பாளர் துபாய் சாகுல் உள்பட பலர் அருகில் உள்ளனர்.
News September 6, 2025
நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

நெல்லை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க
News September 6, 2025
சேரன்மகாதேவியில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் கல்லூரி கலையரங்கத்தில் வைத்து உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் இன்று (செப்.6) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சட்ட பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் தலைமை தாங்கினர். இதில் கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் இசக்கி பாண்டியன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.