News November 7, 2025

நெல்லையில் ரயில் நிறுத்தும் நடைமேடை மாற்றம்

image

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் விரிவாக்க மற்றும் மேம்படுத்தும் பணிகள் காரணமாக, சில முக்கிய மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் வரும் நவம்பர் 29 வரை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ், அந்த்யோதயா எக்ஸ்பிரஸ், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் அனைத்தும் 5வது நடைமேடையில் நிறுத்தப்படும் என தென்மேற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Similar News

News January 27, 2026

நெல்லை காவல் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்

image

கீழப்பாட்டம் கிருபா நகர் பகுதி பொதுமக்கள் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரண்டு வருகை தந்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் நாங்கள் வசிக்கும் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என தெரிவித்தனர்.

News January 27, 2026

நெல்லை: ரூ.3 லட்சம் கடன் வேண்டுமா? APPLY NOW

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். ( SHARE பண்ணுங்க)

News January 27, 2026

நெல்லை: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

நெல்லை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

error: Content is protected !!