News March 22, 2024

நெல்லையில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (மார்ச் 22) காலை 10 மணிக்கு நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படலாம். எனவே அதற்கு மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News

News February 16, 2026

திருநெல்வேலி: ரூ.3 லட்சத்தை காப்பாற்றிய அரிசி டப்பா

image

கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டை பூட்டி வெளியே சென்ற போது இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புகுந்துள்ளனர். அங்கு பீரோவில் இருந்த ரூ.30,000 திருடு போனது. அதே நேரத்தில் அரிசி டப்பாவில் வைத்திருந்த ரூ.3 லட்சம் தப்பியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 16, 2026

திருநெல்வேலி: போலீஸ் வீட்டில் திருடிய சிறுவன் கைது

image

விகேபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றும் ஞானசுந்தர்(38) என்பவரது பொன்மா நகரில் உள்ள வீட்டில் ரொக்க பணம், பொருட்கள் கொள்ளை போனது. இது குறித்து கல்லிடைகுறிச்சி போலீசார் விசாரித்து வந்த நிலையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட தெற்கு பாப்பான்குளம் ஜெயக்குமார்(27) கருத்தப்பிள்ளையூர் வினித்(22), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்து அவர்களிடமிருந்து பணம், பொருட்களை மீட்டனர்.

News February 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப்ரவரி 15 ஆம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!