News February 3, 2026

நெல்லையில் பெண் தீக்குளித்து தற்கொலை!

image

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுப்பம்மாள் (34) இவர் கணவர் சிறையில் உள்ளார். நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த சுப்பம்மாள் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Similar News

News February 6, 2026

நெல்லை : அரசு இலவச LAPTOP விண்ணப்பிப்பது எப்படி?

image

நெல்லை மக்களே கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் விடுபட்ட மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு<> க்ளிக்<<>> செய்து மாணவர்கள் ஆதார் எண் பதிவு செய்து ஐடி உருவாக்குங்க. பின்னர் காலேஜ் ஐடி, மார்க் ஷீட், T.C போன்ற விவரங்கள் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இந்த அருமையான தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க….

News February 6, 2026

நெல்லை மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 6, 2026

நெல்லையில் 1 கிலோ கஞ்சாவுடன் சுற்றிய வாலிபர்

image

திருநெல்வேலி டவுண் குருநாதன் கோவில் விலக்கு அருகில் இன்று (பிப்.5) காலையில், காவல் உதவி ஆய்வாளர் பாண்டி மற்றும் போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருநெல்வேலி காருகுறிச்சி பேச்சிகுட்டி என்ற ராம் (வயது.20) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!