News December 28, 2025
நெல்லையில் பயங்கரம்., தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை!

விக்கிரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (47). இவர் மைக்செட் அமைத்துக்கொடுக்கும் தொழிலாளியாக இருந்தார். இவர் நேற்றிரவு அதே பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தவலறிந்து வந்த அம்பை போலீஸார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
நெல்லையில் இங்கெல்லாம் மின் தடை!

பாளை, சமாதானபுரம், மேலக்கல்லூர், மூலக்கரைப்பட்டி, கங்கைகொண்டான், மானூர், வன்னிகோனேந்தல், மூன்றடைப்பு ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று (டிச 29) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. வி எம் சத்திரம், கிருஷ்ணாபுரம், சீவலப்பேரி, குப்ப குறிச்சி, புதுக்குறிச்சி, சங்கன் திரடு, மாவடி, தெற்குப்பட்டி, கண்ணாடி குளம், பானாங்குளம், களக்குடி அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை.
News December 29, 2025
நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.