News October 7, 2025
நெல்லையில் நீதிபதியை நோக்கி செருப்பை வீசிய சம்பவம்

சேரன்மகாதேவி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சாட்சி, நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக கோபத்தில் கொதித்து, அவரை நோக்கி செருப்பை வீசினார். மேலும் தொடர்ந்து நீதிமன்றத்திற்குள் ரகளை செய்தார். இதை அறிந்து அங்கு விரைந்த போலீசார், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Similar News
News October 7, 2025
கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

நெல்லை சேரன்மகாதேவி கூனியூரில் கடந்த 2013ல் அருணாச்சலம் (எ) குமார் பாண்டியன் என்பவரை கொலை செய்த வழக்கில் நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம் இன்று தீர்ப்பளித்தார். கொலையில் தொடர்புடைய பார்வதி சங்கர் (எ) அருணாச்சலம் முருகன் லெட்சுமணன் ராஜேஷ் (எ) ராஜேஷ் கண்ணா ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தார்.
News October 7, 2025
21 கொலை வழக்குகளில் தண்டனை; எஸ்பி பெருமிதம்

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், 2025 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 21 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும் 71 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 22 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது என கூறியுள்ளார்.
News October 7, 2025
நெல்லை: வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

வீட்டின் உரிமையாளரிடம் இருந்து வீட்டை வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நெல்லையில் அதிகரித்து வருகிறது. வாடகைக்கு பெற்ற நபர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளார். வாடகை வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் விழிப்புணர்விடன் செயல்பட அறிவுறுத்தல் *ஷேர் செய்யுங்கள்