News October 27, 2025
நெல்லையில் நாளை மின்தடை ரத்து

நாளை 28.10.2025 பாளை, சமாதானபுரம், வள்ளியூர், மேலக்கல்லூர், திருவேங்கடம், கலிங்கப்பட்டி, முத்தலான்பட்டி, மலையான்குளம், கங்கைகொண்டான், மானூர், ரஸ்தா, வன்னிக்கோனந்தல், மூலக்கரைப்படட்டி, மூன்றடைப்பு, கரந்தநேரி, பரப்பாடி, ஆகிய உப மின் நிலையங்களில் மேற்கொள்ளவிருந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நிர்வாகம் காரணமாக ஒத்தி வைக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். *ஷேர் பண்ணுங்க
Similar News
News October 27, 2025
வேளாண்மை தொழில்நுட்ப கருவிக்கு ரூ.2.5 இலட்சம் பரிசு

நெல்லை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பூவண்ணன் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; நவீன வேளாண்மை தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு மாநில அளவில் அரசு விருது அறிவித்துள்ளது. முதல் பரிசு ரூ.2.5 லட்சம், 2ம் பரிசு ரூ.1.5 லட்சம், 3ம் பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வேளாண்மை உதவி இயக்குனரிடம் வழங்க வேண்டும்.
News October 27, 2025
மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (அக்.27) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News October 27, 2025
திருநெல்வேலி மாநகராட்சி அதிரடி அறிவிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் உள்ள 55 வார்டுகளிலும் வார்டு சிறப்பு கூட்டங்கள் நாளை (28-10-25) செவ்வாய் கிழமையன்று நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மேயர் தலைமையில் ஒவ்வொரு செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர் மனுநாள் முகாம் நாளை ஒரு நாள் மட்டும் நடைபெறாது என மாநகராட்சி இன்று அறிவித்துள்ளது.


