News December 4, 2024
நெல்லையில் தேமுதிக நிர்வாகிகள் நீக்கம் – பிரேமலதா

நெல்லை மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மாவட்ட துணை செயலாளர் ஐயப்பன், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயசேகர பாண்டியன் ஆகியோர் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Similar News
News August 21, 2025
நெல்லையில் முதல்முறையாக அறிமுகம்

தமிழக அளவில் முதல் முறையாக நோயாளிகளின் பதிவு மற்றும் சிகிச்சை விபரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு தனி செயலி மூலம் அவர்களுக்கு விவரங்களை தெரிவிக்கும் ஹெச் எம் ஐ எஸ் திட்டம் நெல்லை அரசு மருத்துவமனையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலம் தாங்கள் ஏற்கனவே எடுத்த சிகிச்சை விபரங்களை அடுத்து வரும் நாட்களில் காட்டி மேல் சிகிச்சை பெற முடியும். *ஷேர் பண்ணுங்க
News August 21, 2025
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை சிறப்பு ரயில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை – மைசூர் இடையே பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம். நெல்லையிலிருந்து 27ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு மைசூரை அடையும். மைசூரிலிருந்து 26ம் தேதி இரவு 8:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News August 21, 2025
புதிய பண மோசடி; நெல்லை எஸ்பி எச்சரிக்கை

வங்கி மேலாளர் எனக் கூறி பேசும் நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்கள் ஓடிபி குறித்து மக்கள் கூறக்கூடாது. புதிய பிக்சட் டெபாசிட் லோன் சம்பந்தமான ஏ.பி.கே பயில்களை மொபைலில் பதிவிறக்கம் செய்ய கூடாது. போலி அழைப்புகளை உடனே துண்டித்து வங்கி கிளைக்கு சென்று உறுதி செய்ய வேண்டும். மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் 1930 டோல் ஃப்ரீ எண்ணில் புகார் அளிக்க வேண்டும் என நெல்லை எஸ்.பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். *SHARE IT