News September 27, 2025

நெல்லையில் தீயணைப்பு ஊழியர் உயிரிழப்பு

image

வி எம் சத்திரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு அலுவலர் லட்சுமணன். கடந்த 2 நாட்களுக்கு முன் லட்சுமணன் வீட்டில் கால் வழக்கி விழுந்து மயங்கி உள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு லட்சுமணன் உயிரிழந்தார். பெருமாள்புரம் போலீசார் விசாரணை

Similar News

News November 11, 2025

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரூம் அதிகாரிகள் நியமிப்பு

image

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டு வகையிலும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரோந்து அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி நியமித்துள்ளார். திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகாரிகள் ரோந்து பணிகளையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்

News November 10, 2025

நெல்லையில் குடிநீர் கட்டண உயர்வு தீர்மானம் ஒத்திவைப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சியில் குடிநீர் கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்படுவதற்கான தீர்மானம் இன்றும் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். குறிப்பாக அதிமுக சார்பில் மாநகராட்சியின் குடிநீர் கட்டண உயர்வு முடிவைக் கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2025

நெல்லை போலீஸ் தேர்வில் 691 பேர் ஆப்சென்ட்

image

நெல்லையில் போலீஸ் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு அமைதியாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் அனுமதிக்கபட்ட 4905 பேரில் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட 4214 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்காதவர்கள் 691 பேர் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

error: Content is protected !!