News January 11, 2025

நெல்லையில் சைபர் கிரைம் மூலம் ரூ.7 கோடி முடக்கம்

image

நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்: மாவட்டத்தில் கடந்த ஆண்டு தேசிய சைபர் கிரைம் போர்டல் மூலம் 1107 புகார்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 646 மனு ரசீதுகள் வழங்கப்பட்டுள்ளன. 40 குற்றங்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட 190 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.7 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.36 லட்சம் மீட்கப்பட்டுள்ளது என்றனர்.

Similar News

News August 15, 2025

மாணவர்களுக்கு தங்க நாணயம் வழங்கி அசத்திய ஆசிரியர்

image

வெள்ளாங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா நடைபெற்றது. அப்போது பத்தாம் வகுப்பு தேர்வில் கடந்த ஆண்டு சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சமூக அறிவியல் ஆசிரியர் சங்கரநாராயணன் தனது சொந்த செலவில் தங்க நாணயம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கி ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து 12ம் வகுப்பிலும் அதிக மதிப்பெண் எடுக்க வாழ்த்து தெரிவித்தார்.

News August 15, 2025

நெல்லை இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

News August 15, 2025

நெல்லை பாஜக மாநாடு ஒத்திவைப்பு

image

நாகாலாந்து ஆளுனர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக நெல்லையில் ஆகஸ்ட் 17ல் நடக்கவிருந்த பூத் பொறுப்பாளர் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவரும் உறுப்பினருமான பாஜக சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!