News August 12, 2025
நெல்லையில் கொலை அளவு 42% குறைவு – எஸ்பி தகவல்

நெல்லை எஸ்.பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தாண்டு நெல்லை ஊரக மாவட்டத்தில் இதுவரை 18 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. 2024ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 10 %, 2023ல் பதிவான கொலை வழக்குகளை விட 22%, 2022 -ம் ஆண்டு பதிவான கொலை வழக்குகளை விட 42% குறைவாகும். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் பெருமளவு
குறைந்துள்ளது என கூறியுள்ளார். (உங்கள் கருத்து என்ன?)
Similar News
News August 12, 2025
குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி

நெல்லை மாவட்டத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்கள் நாளை 13ம் தேதி ஆரம்பமாகிறது. ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் என்பது குழந்தைகளுக்கு கை கால் மற்றும் மூளை செயலிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 593 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.
News August 12, 2025
நெல்லை காவல்துறை சார்பில் பெண்களுக்கான அறிவிப்பு

தமிழக காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நெல்லையில் உள்ள இடங்களில் ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டாலோ அல்லது அவசர காலங்களில் செயலியில் உள்ள சிவப்பு நிற பொத்தானை அழுத்தினால், உங்கள் விவரம், இருப்பிடம் ஆகியவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று விடும். இதன் மூலம் துரிதமாக உதவி கிடைக்கும். இங்க <
News August 12, 2025
திருநெல்வேலி – பெங்களூர் சிறப்பு ரயில் இயக்கம்

ஆகஸ்ட் 17 மாலை 4.20க்கு திருநெல்வேலியில் புறப்படும் சிறப்பு ரயில், அம்பாசமுத்திரம் தென்காசி, சிவகாசி, மதுரை, திண்டுக்கல் வழியாக மறுநாள் 18ம் தேதி மதியம் 12.20க்கு பெங்களூரு சிவமொக்கா நிலையம் அடையும். ஆகஸ்ட் 18 மதியம் 2.15க்கு பெங்களூருவில் புறப்பட்டு, 19ம் தேதி காலை 10.15க்கு திருநெல்வேலி வரும். 3 ஏ.சி. பெட்டிகள் உட்பட 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.