News October 3, 2025
நெல்லையில் ஒரே இடத்தில் 12 சப்பரங்கள் அணிவகுப்பு

பாளையங்கோட்டையில் நடைபெறும் தசரா பண்டிகையின் மிக முக்கிய நிகழ்ச்சியான அம்மன் சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. பாளையங்கோட்டை ராமசாமி கோயில் திடலில் அடுத்தடுத்து சப்பரங்கள் வந்து நின்றன. தொடர்ந்து அனைத்து சப்பரங்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து சப்பரங்கள் வீதி உலா சென்றன.
Similar News
News October 3, 2025
நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நிற்கும்

நெல்லை – சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது முதலில் எட்டு பெட்டியுடன் இயங்கிய நிலையில் பின்னர் 16 பெட்டிகளாகவும் தற்போது 20 பெட்டிகளாகவும் இணைக்கப்பட்டு இயங்குகிறது. கோவில்பட்டி பயணிகளின் கோரிக்கையை ஏற்று வந்தே பாரத் ரயில் பரிச்சாத்த முறையில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
News October 3, 2025
நெல்லையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; கல்லிடைக்குறிச்சி கோட்டம், வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (4-10-25) காலை மணி 9 முதல் மாலை 5 வரை மற்றும் ஓ.துலுக்கப்பட்டி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். *ஷேர் பண்ணுங்க
News October 3, 2025
நெல்லை: 2 ஆண்டுகளில் 200 கைதிகளுக்கு சிகிச்சை

சமூக ஆர்வலர் மகாராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி கடந்த 2023 முதல் 25 ஆம் ஆண்டு வரை நெல்லை அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது. 18 வயது முதல் 28 வயதுடைய கைதிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.