News October 29, 2025
நெல்லையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை பிற்பகல் 4 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமை தங்குகிறார். இந்த கூட்டத்தில் அனைத்து எரிவாயு நபர் அவர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயனடையலாம். *ஷேர் பண்ணுங்க
Similar News
News October 29, 2025
நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு நவம்பர் 22 ஆம் தேதி ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது குறித்து நெல்லை மாநகர கமிஷனர் சந்தோஷ் காதி மணி வெளியிட்ட செய்தி குறிப்பில்; பாலை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வரும் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆண்கள் 60 பேர், பெண்கள் ஐந்து பேர் என 65 பேர் தேர்வு செய்யப்பட உள்ளன என அறிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News October 29, 2025
திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்: பாபநாசம் அணை 143/64.96%, மணிமுத்தாறு அணை 118/70.72%, சேர்வலாறு அணை 156/57.68%, வடக்கு பச்சையாறு அணை 49.20/ 4.68%, நம்பியார் அணை 22.96/21.21%, கொடுமுடியாறு அணை 52.50/88.25% ஆகா உள்ளது. சில அணைகளில் மட்டும் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.
News October 29, 2025
நெல்லை: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

நெல்லையில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. எனவே மறவாமல் குழந்தை வைத்திருப்போருக்கு SHARE பண்ணுங்க


