News September 6, 2025
நெல்லையில் உயர்ந்த பஸ் கட்டணம்

ஓணம் பண்டிகை- மிலாடி நபி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறைக்காக சென்னையில் இருந்து நெல்லை வந்தவர்கள் நாளை மாலை சென்னைக்கு திரும்ப முன்பதிவு செய்து வருகின்றனர். வழக்கமான ரயில் பாஸ்களில் இடங்கள் நிரம்பிய நிலையில் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ரூ.1,900 முதல் ரூ.3,700 வரை வசதிக்கு ஏற்ப கட்டணம் உயர்ந்துள்ளது.
Similar News
News September 7, 2025
சித்தா கல்லூரியில் சேர விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு

தமிழகத்தின் முதல் அரசு சித்த மருத்துவ கல்லூரியான பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி 60 ஆண்டு பாரம்பரியமிக்கது. இக்கல்லூரியில் இளங்கலை சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்) பயில்வதற்கு 100 இருக்கைகள் உள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 7, 2025
அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் இடமாற்றம்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகத் துணை இயக்குனர் இளையராஜா தூத்துக்குடி மாவட்ட வனத்துறை அதிகாரியாக இடமாற்றம். அதே போல் களக்காடு துணை இயக்குனர் ராமேஸ்வரன் பதவி உயர்வு பெற்று சென்னை முதன்மை தலைமை வன பாதுகாவலராக நியமனம். திருவாரூர் வன அதிகாரி ஸ்ரீகாந்த் பதவி உயர்வு பெற்று அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குனராக பொறுப்பேற்க உள்ளார்.
News September 7, 2025
108 ஆம்புலன்ஸ் பணிக்கு பெண் பைலட் தேர்வு

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளத்தில் இன்று நடந்த 108 பணியாளர்களுக்கான ஆள்சேர்ப்பு நேர்காணல் முகாமில் மேல புது குடியைச் சேர்ந்த விசுவாச மேரி என்பவர் 108 ஆம்புலன்ஸ் (ஓட்டுநர்) பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம் ஏ ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஹெவி வெஹிக்கில் லைசென்ஸ் எடுத்துள்ளார். தமிழகத்தின் 3வது 108 ஆம்புலன்ஸ் பெண் ஓட்டுநராக பயிற்சிக்கு பின் பணி செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.