News November 6, 2025
நெல்லையில் உயரும் குடிநீர் கட்டணம்

நெல்லை மாநகரில் வீடுகளுக்கு குடிநீர் கட்டணம் ரூ.100 இருந்த நிலையில் அதனை வீடுகளின் பரப்பளவு அடிப்படையில் ரூ.120 முதல் ரூ.300 வரை உயர்த்தப்பட உள்ளது. மேலும் பாதாள சாக்கடைக்கான டெபாசிட் தொகை ரூ.5000-ல் இருந்து அதிகபட்சம் ரூ.40,000 வரை உயர இருக்கிறது. நவ.11 அன்று நடைபெறும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.
Similar News
News February 9, 2026
திருநெல்வேலி: மர்மமான முறையில் ஒருவர் கொலை

நெல்லை மூன்றடைப்பு காவல் நிலைய சரகம் பாணாங்குளத்தில் நேற்று இரவு இசக்கி பாண்டி(48) என்ற நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். மூன்றடைப்பு காவல்துறையினர் சம்பவ இடம் சென்று இறப்பிற்கான காரணம் குறித்தும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
News February 9, 2026
திருநெல்வேலியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு!

நெல்லை, பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பை சேர்ந்தவர் விக்னேஷ்வர் (29). இவரிடம் பாரத் (26) என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். விக்னேஷ்வர் பணம் தர மறுத்த காரணத்தால் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக விக்னேஷ்வர் கொடுத்த புகாரின் பேரில் பாளை போலீசார் பரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.
News February 9, 2026
நெல்லை: பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

நெல்லை வாசிகளே! பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சுயசார்புடன் வாழ சத்யவாணி முத்து அம்மையார் நினைவாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கபடுகின்றன. ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் அல்லது நெல்லை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம் . தொடர்புக்கு 0462- 2576265. SHARE பண்ணுங்க!


