News June 12, 2024
நெல்லையில் இன்றைய அரசியல் போஸ்டர்..!

தமிழிசை சவுந்தராஜன் அவர்களை, மேடையில் வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டித்தது போன்ற வீடியோ வைரலானது. இந்நிலையில் அமித்ஷாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து நெல்லை நாடார் மகாஜன சங்கம் சார்பில் கண்டனம் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக பேசிய நெல்லை மாவட்ட நாடார் மகாஜன சங்க தலைவர் அசோகன், எங்களது சங்கத்தில் இருந்து அதிகாரப்பூர்வமான போஸ்டர் இது இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
நெல்லை மக்களின் மனதில் நீங்காத காந்திமதி

நெல்லையில் இன்று தேரோட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியில் திளைத்த போதிலும், அவர்களின் மனதில் நெருடலாக இருந்த பெயர் “காந்திமதி”. நெல்லை மக்கள் முதன்முறையாக காந்திமதி யானை இல்லாமல் இந்த தேரோட்டத்தினை நிகழ்த்தியுள்ளனர். நெல்லை மக்களின் நினைவில் இன்றும் காந்திமதி யானை உயிர்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது. *ஷேர்
News July 8, 2025
நெல்லை: பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு

நெல்லை: பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer) பணிக்காக தமிழகத்திற்கு 60 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 24ம் தேதி கடைசி நாளாகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும். நெல்லையில் தேர்வு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க இங்கே <
News July 8, 2025
நெல்லை மாநகரில் 21ஆம் தேதி வரை போலீஸ் தடை உத்தரவு

திருநெல்வேலி மாநகரில் இன்று நள்ளிரவு முதல் ஜூலை 21, 2025 வரை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி, அனுமதியின்றி பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், தர்ணா, ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது அமைதி மற்றும் மக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.