News October 25, 2024
நெல்லையில் இன்று மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்

நெல்லை மாவட்டத்தில் இன்று(அக்.,25) காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அரிக்கேசவநல்லூர், இலுப்பைக்குறிச்சி, மேல்புதுக்குடி, சிங்கிகுளம், கீழ்காடுவெட்டி, கோடீஸ்வரன்நகர், மலையாளமேடு பகுதிகளில் இம்முகாம்கள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News February 1, 2026
நெல்லை: ஒரே இடத்தில் 488 மது பாட்டில் பதுக்கல்

கங்கைகொண்டான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா தலைமையில் போலீசார் நேற்று (ஜனவரி 31) இரவு ஆலடிப்பட்டி பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மணி (63) என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர் பதுக்கி வைத்திருந்த 488 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
News February 1, 2026
நெல்லை: பெண்களுக்கு தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு கடன் வழங்கப்படும். இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 1, 2026
நெல்லை: போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற மூவர்

மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் காளியப்பன் மற்றும் காவல் துறையினர் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் இன்று வாகன தணிக்கை செய்தனர். அங்கே சந்தேகப்படும்படி வந்த மேலப்பாளையம், குறிச்சி முத்துராம் (19), பாலசுப்பிரமணியம் மற்றும் ஒரு சிறாரை பிடித்து விசாரித்தபோது மூவரும் அரிவாளால் தாக்க முயன்றனர். இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.


