News September 15, 2025

நெல்லையில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள்

image

# இன்று காலை பத்து முப்பது மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

# திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டுகளிலும் இன்று காலை 10 மணி முதல்பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது.

# அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணா சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி காலை 9 மணி முதல் நடக்கிறது. மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE….

Similar News

News September 15, 2025

நெல்லை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா??

image

நெல்லை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து நெல்லை மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க.இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 15, 2025

நெல்லை: ஆட்டோ டிரைவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

கீழ வைராவிகுளத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (55). இவர் ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் 6ம் வகுப்பு படிக்கும் பத்து வயது சிறுமியை தனது ஆட்டோவில் பள்ளியில் விடுவதாக அழைத்து சென்று ஆட்டோவில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி தெரிவித்த தகவலின் படி பெற்றோர் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ மற்றும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

News September 15, 2025

முஸ்லிம் லீக் மாநாட்டில் விருது வழங்கி கௌரவிப்பு

image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்சி மாநாடு மேலப்பாளையம் ஜின்னா தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மைதீன், தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முன்னதாக நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு முஸ்லிம் லீக் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

error: Content is protected !!