News September 3, 2025

நெல்லையில் இனி Whatsapp மூலம் தீர்வு

image

நெல்லை மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!

Similar News

News September 5, 2025

நெல்லை: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் வேலை

image

இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு 976 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இளநிலை பொறியியல் பட்டப்படிப்பை முடிந்தவர்கள் செப்.27 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். BE படித்த உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

News September 5, 2025

நெல்லை: போலி இணையதளம் எச்சரிக்கை

image

பிரதமர் திட்டத்தின் பெயரில் போலி இணையதளங்கள் செயல்படுவதாகவும், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் செயல்பட வேண்டும் என நெல்லை இபிஎப்ஓ தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சுகாதாரம், கல்வி, ரயில்வே போன்ற 12 துறைகளில் ஆள்சேர்ப்பு நடப்பதாக விண்ணப்பங்களை கோறுகின்றன. இதை நம்பி தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். திட்டங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம்.

News September 5, 2025

சபாநாயகர் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி

image

கப்பலோட்டிய தமிழன் வஉசிதம்பரனார் 154வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் வ உ சிதம்பரனார் திருஉருவச் சிலைக்கு (5.9.2025) காலை 9 மணிக்கு அரசின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் ஆகியோர் மாலை அணிவிக்கின்றனர். நிகழ்ச்சியில் எம்பி, எம் எல் ஏக்கள் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

error: Content is protected !!