News December 29, 2025
நெல்லையில் இங்கெல்லாம் மின் தடை!

பாளை, சமாதானபுரம், மேலக்கல்லூர், மூலக்கரைப்பட்டி, கங்கைகொண்டான், மானூர், வன்னிகோனேந்தல், மூன்றடைப்பு ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று (டிச 29) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. வி எம் சத்திரம், கிருஷ்ணாபுரம், சீவலப்பேரி, குப்ப குறிச்சி, புதுக்குறிச்சி, சங்கன் திரடு, மாவடி, தெற்குப்பட்டி, கண்ணாடி குளம், பானாங்குளம், களக்குடி அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை.
Similar News
News December 30, 2025
நெல்லை: டூவீலர் விபத்தில் 2 இளைஞர்கள் பலி!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த யோசுவா (21), சாலமோன் (20) இருவரும் நேற்று இரவு 2 பேரும் டூவீலரில் உவரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து ஊருக்கு திரும்பியபோது கூட்டப்பனை அருகே முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றனர். எதிரே வந்த வேன் எதிர்பாரவிதாமாக பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்தனர். இதுகுறித்து உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 30, 2025
நெல்லை மக்களே., இனி இத தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க

நெல்லை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec)
A – 26 என்றால் மார்ச் 2026 என்று அர்த்தம். இனி உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!
News December 30, 2025
நெல்லை: இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி

வள்ளியூரை சேர்ந்த அபிராமி (29) என்ற பெண் இன்ஸ்டாகிராமில் வந்த வீட்டிலிருந்து படி வேலை விளம்பரத்தை நம்பி அவர்கள் தெரிவித்த தகவல்களின்படி பல கட்டமாக ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் கட்டி ஏமாற்றம் அடைந்தார். இதுபோல் இடிந்த கரையைச் சேர்ந்த அஸ்வினி (33) என்பவர் ஆன்லைன் பகுதி நேர வேலை என்ற விளம்பரத்தை நம்பி ரூ.9,50,000 பறி கொடுத்துள்ளார். இருவரும் அளித்த புகாரை நெல்லை சைபர் க்ரைம் போலீசார் விசாரக்கின்றனர்.


