News October 25, 2024
நெல்லையில் ஆளுநர் பங்கேற்கும் விழா நேரடி ஒளிபரப்பு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா நாளை(26 ஆம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டம் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான இணையதள முகவரியை பல்கலைக்கழகம் இன்று(அக்.,25) வெளியிட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
நெல்லை வழியாக போர்பந்தருக்கு ரயில் இயக்க வலியுறுத்தல்

மகாத்மா காந்தி பிறந்த ஊரான போர்பந்தரையும் அவரது அஸ்தி கரைக்கப்பட்ட கன்னியாகுமரியையும் இணைக்கும் வகையில் நெல்லை வழியாக நேரடி ரயில் சேவையை இயக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது நெல்லையிலிருந்து குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு திங்கள், செவ்வாய் கிழமைகளில் வாராந்திர ரயில்கள் செல்கின்றன. மற்ற ஐந்து தினங்களில் ரயில் சேவை இல்லை எனவே போர்பந்தருக்கு ரயில் இயக்க கோரிக்கை.
News November 3, 2025
நெல்லை : B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 70
3. சம்பளம்: ரூ.40,000-2,20,000
4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
5. வயது வரம்பு: 18-45
6.கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
நெல்லை: பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு

நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அடுத்த 2026 – 27ம் கல்வி ஆண்டில் ஐஐடி என்ஐடி உள்ளிட்ட உயர்த்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிஇ, பி டெக் சேர்க்கைக்கு ஜே இ இ மெயின் தேர்வுக்கு நவம்பர் 27ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in இன்று இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மைய விவரம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.


