News August 27, 2025
நெல்லையப்பர் கோவில் வளாக கடைகள் அகற்ற காலக்கெடு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மர மண்டபத்தில் உள்ள கடைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால், சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரங்களுக்குள் அவற்றை அகற்ற உத்தரவிட்டது. இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி நேரில் விளக்கமளித்தார். கோயிலை புராதன நினைவுச்சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள், பழைமையான மரச்சிற்பங்களை பாதுகாக்க வலியுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.
Similar News
News August 28, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட் 27) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News August 27, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.27] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் ஜோசப் ஜெட்சன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News August 27, 2025
எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் – மாவட்ட வருவாய் அலுவலர்

நெல்லை மாவட்ட அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவில் ஏற்படும் குறைபாடுகள்/தடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் குறைதீர்வு கூட்டம் நாளை பிற்பகல் 4 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது என ஆர்டிஓ சுகன்யா தெரிவித்துள்ளார்.