News September 22, 2025
நெல்லையப்பர் கோவில் நவராத்திரி விழா அறிவிப்பு

நெல்லையப்பர் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை தொடங்கி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் நவராத்திரி கொலு மண்டபத்திற்கு எழுந்தருளி தர்பார் காட்சி நடைபெற உள்ளது. தினமும் காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் மாலையில் தர்பார் காட்சியுடன் மகா தீபாராதனையும் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News September 23, 2025
நெல்லை: ஆட்டோ மோதி சிறுவன் உயிரிழப்பு

சுத்தமல்லி வஉசி நகரை சேர்ந்த 7 வயதுடைய சுடர் செல்வம் என்ற சிறுவன் அவருடைய உறவினருடன் பைக்கில் நேற்று சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று திடீரென பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிறுவன் சுடர் செல்வம் பலத்த காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். நள்ளிரவில் சிறுவன் சுடர் செல்வம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
News September 23, 2025
நெல்லை: கல்விக் கடன் வேண்டுமா? மிஸ் பன்னாதீங்க

நெல்லை மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. நாளை 24 ஆம் தேதி நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும் என மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் பெற்றோர் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு கல்வி கடன் வழங்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 நாட்கள் கல்வி கடன் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் வருகின்ற 23,24,25 ஆகிய மூன்று தேதிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கல்விக்கடன் வழங்கும் முகாமை நடத்துகிறது. இந்த சிறப்பு முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கல்வி கடனை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.