News January 13, 2026
நெல்லையப்பர் கோவிலில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பத்தர தீப திரு விழாவை முன்னிட்டு இன்று(ஜன.13) மாலை தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 06:00 மணிக்கு சுவாமி சன்னதி மணிமண்டபத்தில் இந்த வைபவம் நடைபெறும். இது அணையா விளக்காக 18ம் தேதி வரை காட்சிதரும். அன்றைய தினம் இரவு கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் தீபங்கள் ஏற்றும் வைபவம் நடைபெறும்.
Similar News
News January 23, 2026
நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

நெல்லையில் உள்ள தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் நாளை (ஜன.24) நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொருட்களின் தரம் குறித்து புகார் அளித்தல் உள்பட பல்வேறு சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT
News January 23, 2026
நெல்லை: சாதனை படைத்த பள்ளி மாணவி

நெல்லை சங்கர் நகர் தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவி இனிகா. இவர் மத்திய அரசின் இந்திய அளவில் நடைபெறும் வீர் கதா 5.0 என்ற கட்டுரை போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல்லையில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவி இனிகா ஆவார். புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாணவியும், ஆசிரியர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள உள்ள நிலையில் அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
News January 23, 2026
காவலர் உடற்தகுதி தேர்வு – மீண்டும் ஒரு வாய்ப்பு

நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: சீருடை பணியாளர் உடல் திறனாய்வு தேர்வு நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் நேற்ரு தொடங்கியது. 495 விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்ட நிலையில் 414 பேர் கலந்து கொண்டனர். இன்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. நேற்று பங்கேற்காதவர்கள் இன்று பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


