News January 24, 2026
நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 6, 2026
நெல்லையில் 1 கிலோ கஞ்சாவுடன் சுற்றிய வாலிபர்

திருநெல்வேலி டவுண் குருநாதன் கோவில் விலக்கு அருகில் இன்று (பிப்.5) காலையில், காவல் உதவி ஆய்வாளர் பாண்டி மற்றும் போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருநெல்வேலி காருகுறிச்சி பேச்சிகுட்டி என்ற ராம் (வயது.20) என்பவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து, அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவரை கைது செய்தனர்.
News February 5, 2026
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (பிப்.5) இரவு ரோந்து பணிகளில் கணேசன் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் செந்தில்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News February 5, 2026
நெல்லை புத்தக திருவிழா தேதி மாற்றம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 115 அரங்குகளுடன் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பதாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா வரும் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டு புத்தகத் திருவிழா வரும் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.


