News March 31, 2024

நெல்லைக்கு 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

image

வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிகபட்சம் 16 பட்டன்கள் மட்டுமே உள்ளன. திருநெல்வேலியில் மக்களவைத் தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் நிலை உருவாகி உள்ளது. தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தினர் செய்து வருகின்றனர்.

Similar News

News February 8, 2026

நெல்லையில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

image

நெல்லை கொக்கிரகுளம் தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சுரேந்திரன்(20). தொழிலாளியான இவரை நேற்று இரவு ஒரு கும்பல் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று கல்லால் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் முகத்தில் படுகாயமடைந்த சுரேந்திரன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News February 8, 2026

நெல்லை: போலீஸ்காரருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

களக்காடு அருகே சிதம்பராபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த கலைச்செல்வன்(34) நெல்லை மாநகரில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் 2024-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 17 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்ட நிலையில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ஆனந்த கலைச்செல்வனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

News February 8, 2026

நெல்லை: கஞ்சாவை பதுக்கிய இளைஞர்கள் கைது

image

திருக்குறுங்குடி போலீஸ் பொறுப்பு சப் இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் இன்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜா புதூர் அருகே நின்று கொண்டிருந்த சண்முகசுந்தரம் (32), நம்பிராஜா (23), இசக்கி ராஜா (28) ஆகிய 3 பேரை பரிசோதனை செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை கைப்பற்றி வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!