News June 23, 2024
நெல்லைக்கு வயது 1254

நெல்லை வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய இயக்குனர் மாரியப்பன் இசக்கி இன்று கூறியதாவது, நெல்லை டவுனில் உள்ள பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 770ம் ஆண்டு ஆட்சி செய்த பராந்தக நெடுஞ்சடையன் காலத்து கல்வெட்டாகும். இதில் திருநெல்வேலி பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி நெல்லைக்கு வயது 1254 ஆண்டுகள் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News July 9, 2025
இஎஸ்ஐ பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

இஎஸ்ஐ நெல்லை துணை மண்டல அலுவலக துணை இயக்குநர் விவேக் வெளியிட்ட செய்திக்குறிப்பு, இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடந்த 196-வது கூட்டத்தில், தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் (இஎஸ்ஐசி) உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் பதிவு மேம்பாட்டுத் திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இத்திட்டம் 2025 ஜூலை.1 முதல் டிசம்பர்.31 வரை அமலில் இருக்கும். உரிமையாளர்கள் இஎஸ்ஐசி இணையதளம் விண்ணப்பிக்கலாம் என்றார்.
News July 9, 2025
B.E முடித்தவர்களுக்கு ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே<
News July 9, 2025
நகைக்காக மூதாட்டி வீடு புகுந்து கொலை

வள்ளியூர் மின்வாரிய காலனி பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி(66). இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன் பாலசுந்தர் இவருக்கு நேற்று காலை உணவு கொடுக்க சென்ற போது ருக்மணி தலையில் ரத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்சியடைந்தார். இதில் அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் செயின், 7 பவுன் வளையல் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.