News October 13, 2025
நெல்லைக்கு கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த ஒரு வாரம் தமிழ்நாட்டில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளியன்று கனமழை இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை மறுநாள்(அக்.15) நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
நெல்லை: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News October 13, 2025
நெல்லையில் கோழிகளை வீசி சென்ற மர்ம நபர்கள்

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள மதவ குறிச்சி பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நேற்று மாலை ஏராளமான இறந்த கோழிகள் கொட்டி குவிக்கப்பட்டு கிடந்தன. மர்ம நபர்கள் இதைக் கொட்டி சென்றதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருகிறது. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் கோழிகளை வீசிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
News October 13, 2025
BREAKING நெல்லை: 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

கங்கைகொண்டான் அருகே பருத்திகுளத்தை சேர்ந்த முத்தையா மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு முத்தமிழ்(4),சுசிலா(3) என 2 குழந்தைகள் உள்ளது. முத்தையா முத்துலட்சுமி இருவருக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு விரக்தி அடைந்த முத்துலட்சுமி தனது இரண்டு பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.