News November 20, 2024

நெல்லைக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

image

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் குமரி உட்பட நாகை, நெல்லை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (நவ.20) கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Similar News

News November 20, 2024

நெல்லையில் 95 மிமீ மழை பதிவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று மாலை 4 மணி வரை 95 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 20 மில்லி மீட்டரும் அதற்கு அடுத்தபடியாக பாளையங்கோட்டையில் 16 மில்லி மீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 14 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 11 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

News November 20, 2024

நெல்லை மாவட்ட நிர்வாகத்துடன் செயல்பட வாய்ப்பு

image

பேரிடர் காலங்களில் சமூகத்தை பாதுகாக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைதள பொறுப்பாளர்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள QR ஸ்கேன் மூலம் இணைந்து மாவட்ட நிர்வாகத்துடன் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு  பெற்று செயல்படலாம் என தெரிவித்துள்ளனர்.

News November 20, 2024

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எஸ்பி அறிவுறுத்தல்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை காலங்களில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், மின்சாரம் சம்பந்தமான பொருட்களை கையாளும்போதும், வெளியில் செல்லும்போதும் கவனமுடன் இருக்குமாறும், ஆறு, குளம் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் எஸ்பி சிலம்பரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.