News November 6, 2025
நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்!

*ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும். *செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும். *இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. *மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது. *கடந்த கால விடயங்களை குறை கூறுவதால், அவை சிறந்ததாக மாறிவிடாது.
Similar News
News November 6, 2025
3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். அருணகிரிநாதர் திருப்புகழில் இக்கோயிலின் முருகனை பற்றி பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News November 6, 2025
பிஹார் தேர்தல்.. சற்றுநேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்

பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டமன்ற தொகுதிகளில் இன்று முதற்கட்டமாக 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. NDA கூட்டணியில் JDU 57, BJP 48, LJP 14, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. MGB கூட்டணியில் RJD 73, காங்கிரஸ் 24, CPI(ML) 14 வேட்பாளர்கள் களம் காணுகின்றனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், சுமார் 3.75 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
News November 6, 2025
இன்று IND Vs AUS 4-வது டி20

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டி20 குயின்ஸ்லாந்தில் இன்று நடக்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், 2-வது டி20-ல் ஆஸி., 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், 3-வது டி20-ல் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வென்று இருந்தன. 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளதால் முன்னிலை பெற இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸி., அணியில் ஹெட், ஹேசில்வுட் ஆடப்போவதில்லை.


