News October 23, 2024

நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

image

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

Similar News

News February 2, 2026

சிவகங்கை: NO EXAM.. ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸ் வேலை

image

சிவகங்கை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள்<> இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 2, 2026

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

மதுரை கோட்ட பிரிவில் நடக்கும் பராமரிப்பு காரணமாக ரயில் எண் 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் பிப்ரவரி மாதம் முழுவதும் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பிப்., மாதத்தில் வாரத்தில் புதன்கிழமை தவிர பிற தேதிகளில் மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும். சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

News February 2, 2026

சிவகங்கை: பைக் மீது லாரி மோதி விபத்து

image

தேவகோட்டையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் முப்பையூர் சென்று விட்டு திரும்பி வருகையில் மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பொதுக்குடி சந்திப்பு பகுதியில் அடையாளம் தெரியாத லாரி இவரது பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியன், சூர்யா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தேவகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!