News November 28, 2025

நெருங்கும் புயல்.. டெல்டாவுக்கு விரைந்த NDRF வீரர்கள்!

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில், டெல்டா கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து புதுச்சேரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களுக்கு 8 NDRF குழுவினர் விரைந்துள்ளனர்.

Similar News

News November 28, 2025

WPL: அதிக விலைக்கு ஏலம் போன டாப் 7 வீராங்கனைகள்!

image

நேற்று நடைபெற்று முடிந்த WPL ஏலத்தில் அணிகள் பணத்தை கொட்டி வீராங்கனைகளை வாங்கியுள்ளன. ₹50 லட்சம் அடிப்படை விலை கொண்ட ஒரு வீராங்கனை ₹3.20 கோடிக்கு ஏலம் போனது தான் இன்று ஹாட்டாபிக். இது மட்டுமின்றி, இந்த ஏலத்தின் டாப் 7 ஒப்பந்தங்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். WPL தொடரில் உங்களின் ஃபேவரிட் வீராங்கனை யார்?

News November 28, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் உயர்வு!

image

தங்கம் விலை இன்று(நவ.28) சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹11,840-க்கும், சவரன் ₹94,720-க்கும் விற்பனையாகிறது. <<18408962>>சர்வதேச சந்தையில்<<>> தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், நேற்று(₹240) போலவே இன்றும் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய சந்தையில் சவரனுக்கு ₹560 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

News November 28, 2025

காட்டுப்பூனைகளுக்கு எதிராக போரா?

image

‘காட்டுப்பூனைகளுக்கு எதிராக போர்’. கேட்டாலே ஆச்சர்யமாக உள்ளதல்லவா? நியூசிலாந்தில் உள்ள அரியவகை உயிரினங்களை காட்டுப்பூனைகள் வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. எனவே, பூர்வீக உயிரினங்களை காக்க, 25 லட்சம் காட்டுப் பூனைகளை 2050-க்குள் ஒழிக்க போவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அவற்றை ‘கொடூர கொலையாளிகள்’ என அறிவித்துள்ள அரசு, நியூசிலாந்து ஒரு பெரிய சூழலியல் போருக்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது.

error: Content is protected !!