News February 27, 2026
நெருங்கும் தேர்தல்.. ED தலைமை இயக்குநர் ஆலோசனை

தமிழக தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், ED தலைமை இயக்குநர் ராகுல் நவீன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுப்பது, பரிசுப் பொருள்கள் பதுக்கலை கண்காணிப்பது போன்றவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். ஏற்கெனவே, இதுபோன்ற சட்டவிரோத செயல்பாடுகளை கண்காணிக்க IT துறை, கட்டுப்பாட்டு அறையை துவக்கி இயங்கி வருகிறது.
Similar News
News February 27, 2026
BREAKING: விவாகரத்து வழக்கு தொடர்ந்தார் விஜய் மனைவி

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மார்ச் 20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 1999-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News February 27, 2026
ஆயுதப் படையில் 349 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <
News February 27, 2026
பிஹாரில் தமிழர்கள் சென்ற பஸ் விபத்து… 20 பேர் காயம்

காசி யாத்திரைக்காக 20-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது. பிஹாரின் கயா பகுதியில் பேருந்து சென்ற போது வேண்டுமென்றே டிரக் ஒன்று இடித்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் முதியவர் ஒருவர் பலியான நிலையில், படுகாயம் அடைந்த பலர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


