News March 29, 2024

நெருங்கும் தேர்தல்: ஆலோசனை கூட்டம்

image

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்களவை தேர்தல் தொடர்பாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக்
கூட்டம் இன்று ஆட்சியர் ஷஜீவனா
தலைமையில் நடைபெற்றது.  உடன், தேர்தல் பொது பார்வையாளர் கௌரங் பாய் மக்வானா   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர்.

Similar News

News October 17, 2025

தேனியில் பெண்கள் உட்பட 35 பேர் கைது

image

தேனி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று (அக்.16) சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட மூவர் குழுவை கலைக்க கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

News October 17, 2025

குச்சனூரில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்

image

தேனி அருகே உள்ள குச்சனூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற அக்.18ம் தேதி முகாம் நடைபெற உள்ளதாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். அதனால் அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் தவறாமல் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளனர்.

News October 16, 2025

தேனியில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பு

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தேனியில் அக். 19, 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!