News March 15, 2026
நெருங்கும் தேர்தல்.. அதிமுகவில் புதிய மாற்றம்

தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக ஆட்சி மன்றக் குழுவை மாற்றி அமைத்து EPS அறிவிப்பு வெளியிட்டுள்ளார். EPS தலைமையிலான ஆட்சி மன்றக் குழுவில் தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், SP வேலுமணி, வளர்மதி, வேணுகோபால் Ex MP, ஜஸ்டின் செல்வராஜ், இன்பதுரை MP ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து அதிமுகவினர் செயல்பட வேண்டும் என EPS கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News March 29, 2026
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்.29) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News March 29, 2026
உப்பள தொழிலாளர்களுக்கு ₹8,000.. திமுக வாக்குறுதி

திமுக தேர்தல் அறிக்கையில் நிதி சார்ந்த பல வாக்குறுதிகளை ஸ்டாலின் வெளியிட்டார். *உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ₹5,000-ல் இருந்து ₹8,000 ஆக உயர்த்தப்படும். *தொழிலாளர்களுக்கு நலவாரியங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம் ₹2,000 ஆக உயர்த்தப்படும். *புதிய ஆட்டோ ரிக்ஷா வாங்குவதற்கு ₹1.5 லட்சம் மானியம். *உடலுழைப்பு தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக உயர்கல்வி உதவித்தொகை ₹4,000 ஆக அதிகரிக்கப்படும்.
News March 29, 2026
விபத்தில் பிரபல நடிகர் காலமானார்

கடலில் தவறி விழுந்த பெங்காலி நடிகர் ராகுல் அருணோதய் பானர்ஜி (42) மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் தல்சாரி பீச்சில் நடந்த ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட படகு விபத்தில் அவர் கடலில் தவறி விழுந்தார். ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவருடைய உயிர் பிரிந்தது. ‘சிரோதினி துமி ஜே அமர்’ படத்தில் அவரின் அசத்தலான நடிப்பு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. RIP


