News March 23, 2025
நெருங்கும் கோடை காலம், சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கோடை காலத்தில் பரவக்கூடிய தோல், கண், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய், இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய ‘ஹீட் ஸ்ட்ரோக்’ போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன. வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் உதவியோடு உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்கவும். தேவை இன்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்
Similar News
News March 25, 2025
புதுவையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

தமிழ்நாட்டிற்கு அருகிலுள்ள ஒரு சிறிய நகரம் பாண்டிச்சேரி, ஆனால் சுற்றுலாவைப் பொறுத்தவரை மிகப்பெரிய கூட்டத்தை ஈர்க்கும் இடமாகும் அப்படி நாம் அங்கு காண வேண்டிய இடங்கள் 1. பாரடைஸ் பீச், 2. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம், 3. ஆரோவில், 4. அரிக்கமேடு, 6. செரினிட்டி கடற்கரை 7 . சுன்னம்பார் படகு இல்லம், 8. தாவரவியல் பூங்கா, 9. வெள்ளை நகரம், 10. மணக்குள விநாயகர் கோயில். உங்களுக்கு தெரிந்த இடத்தை கமெண்ட் செய்யவும்
News March 25, 2025
புதுவையில் புத்தக வடிவில் ரேஷன் அட்டை – அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரியில் நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பேசிய அமைச்சர் திருமுருகன், “மீண்டும் புத்தக வடிவிலான ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் மற்றும் நியாய விலை கடைகள் இல்லாத பகுதிகளில் புதிய கடைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காமராஜர் கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகள், வீட்டிற்கான அசல் தொகையை மட்டும் செலுத்தி பத்திரத்தை பெற்றுகொள்ளலாம்” என தெரிவித்தார்.
News March 25, 2025
காமராஜர் கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு சலுகை

புதுவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் திருமுருகன், “குடிசை மாற்று வாரியம் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் Phase I to Phase VI வரை உள்ள பயனாளிகள் வீடுகட்ட தவறியவர்கள் & வீடுகட்டி முடிக்கப்படாத பயனாளிகளிடமிருந்து அசல் தொகையை மட்டும் பெற்று கொண்டு அவர்களது அசல் பாத்திரங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 8,638 குடும்பங்கள் பயன் பெறும்,” என்றார்.