News December 31, 2025
நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம் தெரியுமா

‘123PAY UPI’ மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். ‘8045163666’ என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். இப்பதிவை நண்பர்கள் அனைவருக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 19, 2026
கேஸ் வெடித்து 38 பேர் பரிதாபமாக பலி

நைஜீரியாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டின் பஷார் மாவட்டத்தில் உள்ள சுரங்கக் குழிகளில் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்த போது, திடீரென கேஸ் வெடித்துள்ளது. அப்போது வெளியேறிய ‘கார்பன் மோனாக்ஸைடு’ என்ற நச்சுவாயு தான் 38 பேர் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட 25-க்கு மேற்பட்டோர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News February 19, 2026
தோனியின் கதையால் எனது வாழ்க்கை மாறியது: பாக். வீரர்

‘MS DHONI: The Untold Story’ திரைப்படம் பார்த்த பிறகுதான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்ததாக பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தோனி போலவே நானும் வேறு ஒரு வேலையில் இருந்ததாகவும், அப்படியான நிலையில் இருந்து வரலாறு படைக்க முடியும் என்ற நம்பிக்கை தோனியிடம் இருந்து கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News February 19, 2026
அமைதியும் செழிப்பும் நிலவட்டும்: PM ரம்ஜான் வாழ்த்து

ரமலான் மாதத்துக்கான பிறை தெரிந்ததால் இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்குகிறது. இந்நிலையில் இஸ்லாமிய மக்களுக்கு PM மோடி தனது ரம்ஜான் வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்த புனிதமான மாதம் நமது சமூகத்தில் ஒற்றுமையின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும் என்றும், எங்கும் அமைதியும் செழிப்பும் நிலவட்டும் எனவும் மோடி X தளத்தில் வாழ்த்தியுள்ளார்.


