News January 23, 2026
நெகிழ வைக்கும் 5 வயது சிறுமியின் போட்டோ!

சட்டவிரோதமான குடியேற்றத்திற்கு எதிராக USA அதிகாரிகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மின்னசோட்டா மாகாணத்தில், அதிகாரிகளால் 5 வயது சிறுமி ஒருவரும் தடுப்பு மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். என்ன நடக்கிறது என புரியாமல், அக்குழந்தை அழுதபடியே நின்ற காட்சி பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. பள்ளியில் இருந்தே அச்சிறுமியை அதிகாரிகள் அழைத்துச் சென்றதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Similar News
News February 13, 2026
எதிர்கட்சியா கூட திமுக வராது: செல்லூர் ராஜு

திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ‘தாலி கட்டிய மனைவி’ போல் ஆகிவிட்டனர் என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். தேர்தலுக்காக மட்டுமே கூட்டணி; தேர்தல் முடிந்துவிட்டால் மக்கள் பிரச்னையில் கூட்டணியில் இருந்தாலும் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், திமுக கூட்டணி தலைவர்கள் மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுப்பதில்லை என்றார். மேலும், 2026-ல் அதிமுக ஆட்சியமைக்கும், எதிர்கட்சியா கூட திமுக வராது என விமர்சித்தார்.
News February 13, 2026
பிரதமர் வெளிநாட்டு பயணம்.. ₹462 கோடி செலவு

கடந்த 5 ஆண்டுகளில் PM மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ₹462.58 கோடி செலவிடப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, யுஏஇ, யுகே, ஆப்ரிக்கா, ரஷ்யா, பிரேசில் உள்ளிட்ட 43 நாடுகளுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் மட்டும் பிரதமர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றபோது ₹25.5 கோடி செலவிடப்பட்டது. இதுதான் பிரதமர் வெளிநாட்டுப் பயணங்களிலேயே அதிக செலவான தொகை.
News February 13, 2026
பிப்ரவரி 12: வரலாற்றில் இன்று

1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
2019 – புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட நாள்
1483 – முகலாயப் பேரரசர் பாபர் பிறந்த தினம்
1952 – சுஷ்மா சுவராஜ் பிறந்த தினம்


