News February 14, 2025

நூதன முறையில் ஏ.டி.எம் மையத்தில் திருட்டு

image

தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள பல்வேறு ஏ.டி.எம் மையங்களில் வயதானவர்களுக்கு உதவுவது போல நடித்து அவர்களது ஏ.டி.எம் அட்டையை திருடி நூதன முறையில் பணம் திருடி வந்த அஞ்செட்டி அருகே உள்ள எருமுத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (20) என்ற வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் 10ஆம் வகுப்பு, படித்துவிட்டு ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

Similar News

News April 21, 2025

கிருஷ்ணகிரியில் வாட்டி வதைக்கும் வெயில்

image

கிருஷ்ணகிரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 21, 2025

ஓட்டுநர், நடத்துனர் பணி: இன்றே கடைசி நாள்

image

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <>க்ளிக் செய்து <<>>விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க

News April 21, 2025

கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 15 பேர் கைது

image

ஓசூர் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் அடவிசாமிபுரம், நல்லூர் கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா வைத்து விற்பனை செய்த காமையூரை சேர்ந்த பிரபாகரன் (வயது 32), கெலவரப்பள்ளி அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த கணேசன் (70) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கிருஷ்ணகிரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!