News November 6, 2025
நுரையீரலே இல்லாமல் சுவாசிக்கும் அதிசய உயிரினம்

உருவத்தில் சிறிதாக இருப்பதால் நம்மை போல நுரையீரல் எறும்புகளுக்கு இல்லை. மாறாக, தனது உடலில் உள்ள Spiracles எனப்படும் துளைகள் வழியாகத்தான் இவை ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றன. துளை வழியாக உள்ளே செல்லும் ஆக்சிஜன் டிராக்கியா (Tracheae) எனப்படும் நுண்ணிய குழாய்கள் மூலம் செல்களுக்கு செல்கிறது. கார்பன் டை ஆக்சைடும் அதே வழியில் வெளியேறுகிறது. 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.
Similar News
News February 9, 2026
திமுகவின் இழுபறிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைக்காதது குறித்து காங்., வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இப்போதே கூட்டணியை உறுதிப்படுத்தினால் ஊடகங்களில் இதுபற்றிய செய்தியே அதிகம் வரும். எனவே, ‘மீண்டும் ஸ்டாலின்’ என்ற பிம்பத்தை மக்களிடத்தில் கொண்டு செல்ல முடியாது என்பதால் இம்மாத இறுதியில் குழு அமைக்கலாம் என CM ஸ்டாலின் கூறியதாக இண்டியா கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News February 9, 2026
திரிஷா மாதிரி மனைவி வேணும்.. Watermelon ஸ்டார்

தனக்கு த்ரிஷா மாதிரி ஒரு மனைவி அமைந்தால் நன்றாக இருக்கும் என பிக்பாஸ் புகழ் திவாகர் கூறியுள்ளார். மேலும், தனக்கு நடிகை தமன்னாவையும் மிகவும் பிடிக்கும் எனவும் அவர் வெட்கத்துடன் கூறியுள்ளார். மேலும், தான் எங்கு பெரிய ரொமாண்டிக் ஹீரோ ஆகிவிடுவேனோ என்ற பயத்தில், சிலர் தேவையில்லாமல் தன்னை வயதானவன் என பொய் செய்திகளை பரப்பி வருவதாகவும் அவர் குமுறியுள்ளார்.
News February 9, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரே நாளில் ₹15,000 மாறியது

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று (பிப்.9) உயர்ந்துள்ளது. 1 கிராம் ₹15 உயர்ந்து ₹300-க்கும், 1 கிலோ வெள்ளி ₹15,000 உயர்ந்து ₹3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஒரேநாளில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளது, இன்று நகை வாங்க நினைத்தோருக்கு கலக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதேநேரம் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


