News June 11, 2024
நுகர்வோர் நீதிமன்ற வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

மதுரையைச் சேர்ந்த காஜா மைதீன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், “மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் நுகர்வோர் தீர்ப்பாய உறுப்பினர்களை நியமனம்” செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தார். இன்று, வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், “மாநில நுகர்வோர் பிரச்சனை தீர்வு ஆணையத்தின் பதிவாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது”.
Similar News
News September 9, 2025
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரி காலமானார்

தமிழகத்தின் முன்னணி நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜய்காந்தின் சகோதரி மருத்துவரான விஜயலெட்சுமி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட உள்ளது. நாளை மதுரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மதுரை மாவட்டத்தை விஜயகாந்த் குடும்பத்தினர் பூர்விகமாகக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
News September 9, 2025
மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி

மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆகஸ்ட் 26 முதல் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில், செப்.12ம் அன்று நிறைவு பெற உள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான குழுப் போட்டிகள் நேற்று தொடங்கின. அறிவுசார் குறைபாடு உடையோர், காதுகேளாதோர், பார்வையற்றோர், கை, கால்கள் பாதிக்கப்பட்டோர் என 5 பிரிவுகளில் 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
News September 9, 2025
கடன் ஆப்ஸ் மோசடி – மதுரை மாநகர காவல்துறை

மதுரை மாநகர காவல்துறை சார்பில் 26 கடன் செயலி மோசடி குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் பெயரில் ஆப்களை பதிவிறக்கம் செய்து, தொடர்புகள் மற்றும் புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டு மாற்றி நண்பர்கள், உறவினர்களிடம் அனுப்பி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே RBI அங்கீகரித்த ஆப்களிலேயே கடன் பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.